onecol

டோனிக்கும் கோஹ்லிக்கும் இடையே மோதலா? முகமது ஷமி கருத்து


டோனிக்கும் கோஹ்லிக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இது பற்றி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார்.





வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததால் அணித்தலைவர் டோனிக்கு நெருக்கடி ஏற்பட்டது.இதை தொடர்ந்து அணித்தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார்.

இந்நிலையில் அவருக்கு சக வீரர்களான அஸ்வின், ரெய்னா ஆதரவு தெரிவித்தனர். அதே சமயம் இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக கூறப்பட்டது மேலும், டோனிக்கும், கோஹ்லிக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்திய அணியில் குழப்பம் இருப்பதாக விராட் கோஹ்லி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது பற்றி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறுகையில், டோனியும், கோஹ்லியும் உடை மாற்றும் அறையில் இயல்பாக உள்ளனர். அவர்களுக்கு இடையே எந்தவித மோதலும் இல்லை.
வங்கதேசத்தில் முதன்முறையாக ஒருநாள் தொடரை இழந்ததற்கு நமது பந்துவீச்சு சிறப்பாக அமையாததே காரணமாகும்.
இந்திய அணி சிறப்பாக விளையாடாததை வைத்து தான் இது போன்ற கேள்விகள் எழுகின்றன. ஊடகங்கள் தான் இப்படி தவறான தகவல்களை வெளியிடுகின்றன.
தகுந்த ஆதாரமில்லாமல் இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டாம். இது வீரர்களை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முகமது ஷிமி உலகக்கிண்ணத் தொடரில் அனல் பறக்கும் பந்துவீச்சாள் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 4வது இடம் பிடித்தார். காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் வங்கதேச தொடரில் இவர் விளையாடவில்லை.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply