onecol

முத்தமழையில் நனைந்த ஜோகோவிச்!


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு மோதினார்.



இந்த போட்டியில் 6-4, 6-7, 10-8 என்ற செட்கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜோகோவிச் திடீரென தனது சட்டையை பார்வையாளர் பகுதியில் இருந்த இளம் ரசிகை ஒருவரிடம் வீசினார்.
அதை பார்த்த வீரர் ரிச்சர்டு, பதிலுக்கு தனது சட்டையை கழற்றி மற்றொரு இளம் ரசிகையிடம் கொடுத்தார்.
பதிலுக்கு அந்த இளம் ரசிகை, ரிச்சர்டுக்கு கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்து அசத்தினார்.
இந்த முத்தத்தை பார்த்து அதிர்ந்த ஜோகோவிச்சிடம் சட்டையை வாங்கிய ரசிகை, அவரை அழைத்து மாறி மாறி கன்னத்தில் முத்தமழை பொழிந்தார்.
டென்னிஸ் வீரர்களுக்கு ரசிகைகள் முத்தமழை கொடுத்து மைதானத்தையே அதிர வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags: , ,

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply