சேலம் மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தமிழன் ஆ.பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தன்னுடன் போட்டோ எடுப்பதற்கான தேதியை அறிவித்துள்ளார். ஆனால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் சேலம் மாவட்டத்திற்கான தேதியை இன்னும் அவர் அறிவிக்கவில்லை.
இதை பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை நேரில் அழைத்துச் சென்று நடிகர் விஜயுடன் போட்டோ எடுத்து தருவதாக கூறி ரூ.1000, ரூ.2000 ஆயிரம் என வசூல் வேட்டையில் சிலர் ஈடுபட்டு வருவதாக மாவட்ட தலைவருக்கு புகார்கள் வந்துள்ளன.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் மோசடி கும்பல் போனில் பேசினாலோ அல்லது நேரில் வந்து பணம் வசூல் செய்தாலோ மாவட்ட தலைமை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த மோசடி கும்பலை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.
சேலம் மாவட்ட ரசிகர்களுக்கு தேதி அறிவித்த பிறகு மாவட்ட தலைமை மூலம் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


0 comments