அண்மையில் திருமணம் முடித்த இளம் தம்பதிகள் தமக்கு சீதனமாகக் கொடுத்த வீட்டில் பெண்ணின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை அவர்கள் வளர்த்த கோழிச் சேவல் காணாமல் போயுள்ளது. அவர்களது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடிகார நபர் ஒருவரே சேவலைத் திருடியதாகத் சந்தேகப்பட்ட பெண்ணின் தாயார் அங்கு சென்று விசாரித்த போது அங்கு வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அயலவர்களால் அது தீர்க்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அன்று இரவு கடும் போதையில் வந்த அயல் வீட்டு குடிகார நபர் அண்மையில் திருமணம் முடித்த அந்த வீட்டுப் பெண்ணைப் பற்றிய காதல்களையும் அவள் யாருடன் தொடர்பில் இருந்தால் என்பதையும் அவர்களது வீட்டுக்குச் சென்று மாப்பிளைக்குத் தெரிவித்துள்ளான்.
இதனால் கோபமுற்ற மாப்பிளை குடிகாரனைத் தாக்கியதாகவும் இதனையடுத்து குடிகாரனின் உறவினர்கள் சிலரும் அந்தப் பெண்ணைப் பற்றி தவறாகத் தெரிவித்து அப் பெண் காதலித்ததாகத் தெரிவித்து அயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனையும் அழைத்து வந்து தொலைபேசி குறுஞ் செய்திகளையும் காட்டியுள்ளனர்.
அதனைப் பார்த்த மாப்பிளை உடனடியாகவே அந்த வீட்டில் இருந்து தனது இளம் மனைவியையும் விட்டு விட்டு வெளியேறியுள்ளார். தற்போது இந்த விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
திட்டமிட்டு போலியான குறுஞ் செய்திகளை ஏற்படுத்தி தனது பெண்ணின் வாழ்க்கையை அயல்வீட்டுக் குடும்பம் குலைத்துவிட்டதாக பெண்ணின் தாயார் குமுறுகின்றார்.
இதே வேளை குறுஞ் செய்தி பற்றிய தகவல்களை பொலிசாரிடம் துணிவிருந்தால் பெண்ணின் தாய் முறையிடலாம் என்று அயல்வீட்டுக் குடிகாரனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை இத்தனைக்கும் காரணமாக இருந்த கோழிச் சேவல் பல கோழிகளின் வாழ்க்கையுடன் விளையாடிவிட்டு அடுத்த நாள் மாலையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன


0 comments