ஆலயம் சென்று
எம் பிரான் வணங்கி
அரிசில் ''அ '' எழுத
அப்பா மனமகிழ
பட்டாடை ஆணிந்து
பள்ளி கூட்டி சென்று
பதிவேட்டில் என் பெயர்
பதித்து
பார்த்த புது முகம்
பழகியதில்லை
பயத்தால் கண்கலங்க
புதுமுக டீச்சர்
பாசத்துடன் அமரவைத்து
பாடத்தை தொடர
விளையாட கூட்டிசென்று
வெண்ணிற ஆடை
கருநிறமாக
மணியோசை கேட்க
தேவாரம் பாடி
வீடு செல்ல
படித்ததை அம்மா வினாவ
செல்ல மொழியால்
நான் சிணுங்க
நடந்தது அனைத்தும்
புதியது புரியாததாக
வருடங்கள் வந்து
மெல்ல மெல்லக் கடந்து
பழகிய முகங்களாகி
நட்பினை தொடர்ந்து
பள்ளித்தோழனாய்
தோள் கொடுத்து
பருவங்கள் மாறி
பாசத்து உறவகளாகி
மாணவர்களாக
நாம் திகழ்தோம்
ஆண்டிற்கு வரும்
விழாக்களை இனிமையாக
கொண்டாடி
கமலத்திலிருக்கும்
கல்ல்வித் தாய்க்கு
பூசை புனைந்து
மனமகிழ்தோம்
கற்றபயணத்துக்கு பயணிக்க
அறியாததை கற்றுக்கொடுத்த
ஆசான் பெருமை கொள்ள
கற்ற சாலை புகழ் பரவ
தாய், தந்தை கனா நனவாக
பரீட்சையில் தோற்றுவித்து
பெறுவோர் கேட்க மனம்
மகிழ்ந்தவர் சிலர்
மனம் நொந்தவர் பலராக
பிரிவுக்குள்ளாகினோம்
பிரியா விடையன்று
உணர்வுகளோடு
உறவாடி உண்மையான
நட்பை வெளிக்காட்டும்
நாள்ளன்று
பிரிவதை நினைத்து
கண்ணீர் கசிந்து கன்னங்களில்
ஓடுகிறது
ஆசான், பெரியோர்
நண்பன் நண்பியோடு
புகைப்படம் உரு பொறித்து
பள்ளிக்காதலியோடும்
புகைப்படம் எடுத்து
கைகுளுக்கி
கட்டியணைத்து
பிரிவை நினைக்க
நெஞ்சம் எரிய
ஆழமுடியாமல் விக்கித்தவித்து
இதயம் துடி துடிக்க
தவற விடும் நாளை
எண்ணி ஏங்கினோம்
எம் பிரிவுடனும்
பள்ளிகாதலும் பிரிந்தது
பார்த்த முகமெல்லாம்
கண்ணீர் சொரிய
எம்மீது வைத்தபாசம் புரிய
அழுகையுடன் கைகொடுத்து
நன்றி
சொல்லி
சோக விசும்பலுடன்
மீண்டும் கிடைக்காதா என்று
கற்பனை சொல்ல
நடக்காதென்று உள்மனம் உரைக்க
பிரிந்து சென்றோம்
பிரிவுச்சுமைகளுடன்
பிரிந்து சென்ற
பள்ளி நாட்கள்
நினைவு வர
வேம்பு மரத்தின்
கிழ் வேதனையுடன்
இருந்தன்று
தேனையொத்த வந்த
தேனீர்கள் இசைபாட
பள்ளி நாட்கள் நினைவுகளை
புரட்டிப்பார்த்தேன்
ஒரு கணம் ....


0 comments